இணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.

Post date: 27-May-2011 11:22:06

நாம் எமது கணனியில் வைரஸ் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க பல்வேறு வகையான சாப்ட்வெயார்களை பயன்படுத்துகிறோம். இதைப்போல நாம் அன்றாடம் பார்வையிடும் இணையத்தளங்களையோ அல்லது எமது இணையத்தளங்கள் மற்றும் ப்ளாக்கர்களிலோ வைரஸ் இருக்கின்றதா என்பதை சோதித்துப்பார்க்க ஒரு இணையத்தளம் இருக்கின்றது.

குறித்த இணையத்தளத்திற்கு சென்று நாம் ஸ்கேன் பண்ணவிருக்கும் தளத்தின் முகவரியை இட்டு ஸ்கேன் பொத்தானை அழுத்தும் போது சில வினாடிகளில் முடிவினை பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் உங்கள் தளங்களுக்கும் இவ்வாறு செய்து பாருங்கள். குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்குங்கள் http://www.urlvoid.com/