தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு

Post date: 10-May-2011 05:17:02

பெரும்பாலான எம்மவர்களின் ஒரு முக்கிய கவலைகளில் ஒன்று தலைமுடி உதிர்வது. தற்பொழுது அதற்கான நிரந்தர தீர்வொன்றை விஞ்ஞானிகள் சிலர் எதேற்சையாக கண்டு பிடித்துள்ளனர்.

இப்பொழுது நீங்கள் உங்கள் மிகும் சந்தோசத்தை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால், அந்த மருந்தானது தற்பொழுது  சுண்டெலிகளில் மாத்திரமே தொழிற்படுகிறது. அந்த மருந்தை மனிதர்களுக்கு ஏற்றதாக மிகவிரைவில் மாற்றலாம் என அவ்விஞஞானிகள் தெரிவித்திருப்பதால் கொஞ்ச சந்தோசமும் எதிர்பார்ப்பும் கொண்டிருப்பதில் தவறில்லை

இந்த இடத்தில், நாம் எல்லோரும் பாவிக்கும் (ஒவ்வாமை உள்ளவர்கள் கூட வாழ்க்கையில் ஒரு தடவையாவது பாவித்திருப்பீர்கள்) penicillin எப்படும் பல உயிர்களை காத்துள்ள மருந்தானது அலாக்சாண்டர் பிலெமிங் எனப்படும் விஞ்ஞானியின் எதேற்சையான கண்டுபிடிபே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மீண்டும் தலைமயிர் உதிர்தலுக்கு வருவோம்.

சில விஞ்ஞானிகள் மன அழுத்ததுக்கும் சமிபாட்டுத்தொகுதிக்கும் இடையிலான தெடர்பை ஆராய்வதற்காக பிறப்புரிமையியல் மாற்றப்பட் (genetically engineered) சுண்டெலிகளை பாவித்துகொண்டிருந்த போதே இதை அவதானித்தனர். சுண்டெலிகளானது corticotrophin-releasing factor எனப்படும் hormone அதிகளவு சுரப்பனவா மாற்றப்பட்டிருந்தன. இந்த அதி மன அழுத்தத்துடன் உருவாக்கப்பட்ட எலிகளானது, நாளடைவில் வயதாதல் காரணமாக சாதாரண எலிகளை போன்று தமது உடல் மயிர்களை இழந்தன (படம் "க"). பின்பு விஞ்ஞானிகள் astressin-B எனப்படும் புரதமூலக்கூறு ஒன்றை corticotrophin-releasing factor ன் செயற்பாட்டை நிறுத்துவற்காக பரிசோதனையின் மற்றொரு படியாக சுண்டெலிகளுக்கு பாச்சினர். அதன்போது அவர்கள் சுண்டெலிகளிம் மயிர் அற்ற தன்மையை கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக, நாளடைவில் எலிகளின் மயிர் மீள வளர்வதை அவதானித்தனர் (படம் ௨, ௩).

மனிதர்களின் தோலில் corticotrophin-releasing factor இருப்பது ஏற்கனவே அறிந்த விடயம். ஆதலால்தான் இந்த கண்டுபிடிப்பானது மனிதர்களுக்கு பயன்படலாம் என நம்பப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு PLoS One online journal ல் கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும் (ஆங்கிலம்)

CRF Receptor Antagonist Astressin-B Reverses and Prevents Alopecia in CRF Over-Expressing Mice

http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0016377