ஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி

Post date: 04-May-2011 12:21:21

அங்குலம் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த விஞ்ஞானம் தற்போது மீட்டர் மீட்டராக வளர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையின் பிரதிபலிப்பாக இந்தியாவைச் சேர்ந்த PhD மாணவரான 29 வயதான பிரணவ் மிஸ்ட்ரி ஆறாவது புலன்(Sixth Sense) எனும் சாதனத்தை உருவாக்கி கணினி மற்றும் தகவல் தொழினுட்பத்துறைக்கு சவால் விடுத்துள்ளார். தொழினுட்பத்திற்கும் மனித சாதாரண வாழ்க்கை முறைக்கும் இடையான இடைவெளியை குறைக்கும் முகமான அவரது கண்டுபிடிப்புக்கள் வேறுபட்ட ஒரு வாழ்க்கைத்தளத்தை உருவாக்கும் என்பது நிச்சயமாகப் புரிகின்றது

உடல் அங்கங்களின் அசைவுகளைப் புரிந்து செயற்படும் கருவி ஒன்றினை அவர் 2000 ஆண்டிலேயே உருவாக்கியதும் அதை அப்போதைய இந்திய ஜனாதிபதி Dr. அப்துல் கலாம் முன்னிலையில் காட்சிப்படுத்தி பாராட்டுப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் Pocket Projector, கண்ணாடி, கேமரா ஆகியவற்றினை இணைத்து ஆறாவது புலன் கருவியை உருவாக்கி உள்ளார். TabletPC, I-Pad ஆகியவை தற்போதுதான் பாவனைக்கு வந்துள்ள நிலையில் அதை விடப் பன்மடங்கு முன்னேற்றகரமான கருவி ஒன்றை உருவாக்கி உள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் உற்பத்திப் பெறுமதி ஏறத்தாள 350 அமெரிக்க டாலர்களாக இருக்குமென அவர் கூறியதோடு இதற்குரிய OpenSource மென்பொருளை இலவசமாக வழங்குவதாக அவர் கூறினார்.

இந்தக் கருவி என்ன செய்கிறது - திரை தேவை இல்லை பெரிய அளவிலான கருவியும் இல்லை கழுத்திலே மாலை போல அணிந்து கொண்டு காதில் செவிப்பன்னியை சொருகிக்கொள்ளுங்கள் நீங்கள் செல்லும் இடமெல்லாம் வருகிறது ஆறாம் புலன். கிடைக்கும் சுவர்களின் கிடைக்காவிட்டால் வெள்ளைத் தாளினை உங்கள் திரையாக பயன் படுத்தி உங்கள் கை விரல்களாலேயே சுட்டுங்கள். கை விரல்களால் தேவையான இடங்களை படம் பிடிக்கலாம்.