ஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற

Post date: 04-May-2011 07:16:58

ஓன்லைன் மூலம் நாம் விரும்பும் புகைப்படங்களை கேலிச்சித்தர புகைப்படங்களாக நொடியில் இலவசமாக மாற்றலாம்.

நாம் எடுத்தப் புகைப்படங்களை கேலிச்சித்திர படமாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நொடிகளில் நம் புகைப்படங்களை கேலிச்சித்திர புகைப்படமாக மாற்றலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று எந்த புகைப்படத்தை கேலிச்சித்திர புகைப்படமாக மாற்ற வேண்டுமோ அதை Open என்ற பொத்தானை சொடுக்கி தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும்.

சில நொடிகளில் நாம் தேர்ந்தெடுத்தப் புகைப்படம் கேலிச்சித்திர புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கும். lens Details என்பதை சொடுக்கி நம் தேவைக்கு தகுந்தது போல் புகைப்படத்தை மாற்றலாம்.

எல்லாம் சரியாக மாற்றிய பின் Save Image என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்றிய படத்தை நம் கணணியில் சேமிக்கலாம்.

http://www.caricaturesoft.com/online-tools/cartoons/