உலகில் மிக விலை உயர்ந்தவை

posted May 10, 2011, 4:06 AM by Onthachimadam WebTeam
மிக விலையுயர்ந்த நாய்


11 மாதங்களான 180 பவுண்ட் எடையுடைய நாய்க்கு ஹொங் டொங் என்று பெயர் வைத்துள்ளார்கள். கோள்களிலேயே மிக விலையுயர்ந்த நாயாக இது தற்போது கருதப்படுகிறது. இதன் விலை 1.5 மில்லியன் டொலர்கள். சைனாவின் மிகப் பெரிய பணக்காரர்களிடையே தமது தகுதியை வெளிப்படுத்தும் சின்னமாக இந்த சிவப்பு மற்றும் பிரவுண் கலந்த முடியையுடைய நாய் கருதப்படுகிறது.

உலகின் விலையுயர்ந்த மெனிக்யூர்

உங்கள் நகங்களில் வைரங்களைப் பெற முடியுமானால் உங்களுக்கு வைர நகைகள் எதற்கு? ஆமாம் நீங்கள் வைர மெனிக்யூரினைப் பெற முடியும். அதனை வழங்கும் செரிஸ் அங்குலா விற்கு நன்றி கூறுங்கள். மிக விலையுயர்ந்த மெனிக்யூரினை செய்து கொள்வதன் மூலம் 10 கரட் வைரங்களை உங்கள் நகங்களில் பதித்துக்கொள்ள முடியும். அதிகம் பயப்படாதீர்கள், வைரம் பதித்ததற்கு பின்னரான சேவையும் மற்றும் அவற்றை உங்கள் நகங்களிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் விரும்பும் வேறொரு விலைமதிப்பற்ற கல்லைப் பதிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. தற்காலத்தில் செரிஸ் இல் வழங்கப்படும் மெனிக்யூரின் விலை 51 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.

உலகின் மிக விலையுயர்ந்த பேனா
அரோரா டயமனேட் எனப்படுகின்ற பேனாவில் 30 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு தொன் ரோடியம், 18 கரட் திடமான தங்க நிப் கொண்ட இந்தப் பேனாவின் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை தான் மிக விலையுயர்ந்த பேனாக்களாக எப்பொழுதுமே கணிக்கப்படுகின்றன.

உலகின் விலையுயர்ந்த வாசனைத் திரவியம்
500ml வாசனைத் திரவியம் அடங்கிய போத்தல் ஒன்றின் விலை 215ஆயிரம் அமெரிக்க டொலர்கள். இந்தப் போத்தலிலின் மூடியைச் சுற்றி 18 கரட் தங்க வளையமும் 5 கரட் வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. 10 போத்தல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இந்த வாசனைத் திரவியம் குறைந்த பொருட்களை உள்ளடக்கி குறைந்த விலையிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

உலகின் விலையுயர்ந்த விஸ்க்கி
ஐக்கிய இராச்சியத்தின் Master of Malt  மற்றும் ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து பழமையான மற்றும் விலையுயர்ந்த ஸ்கொட்ச் விஸ்க்கி போத்தலினை 8 மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்கு விட்டனர். விலையுயர்ந்த காஸ்க்கினைக் கொண்ட இந்த விஸ்க்கியின் விலை 1405,400 அமெரிக்க டொலர்கள்.


May 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது
Comments