உலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்

Post date: 10-May-2011 10:50:36

சவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை

பாவனையாளர்கள் பற்றிய உளவு பார்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி சவூதி அரேபியா பிளக்பரி கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார கால இடைவெளியில் பிளக்பரி பாவனையை தடை செய்த இரண்டாவது நாடாக சவூதி அரேபியா பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் சவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் பிளக்பரி கருவிகளின் சில தொழிற்பாடுகளை நாட்டிற்குள் செயற்படுத்த முடியாது. பிளக்பரி தொழில்நுட்பத்தின் தரவு மறையாக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு வலையமைப்பை ஊடறுக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது.

இதனால் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பிளக்பரி கருவியின் சில சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன.

பாகிஸ்தானில் பேஸ் புக் பாவனை தடை

இந்த இணைய சேவை இழிவான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி பாகிஸ்தான் அரசாங்கம் பேஸ் இணைய வலையமைப்புச் சேவையை முடக்கியது. சமூக இணைய வலையமைப்iபான பேஸ் புக் மூலம் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகல் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இஸ்லாமிய கடும்போக்குவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை சித்திரமாகத் தீட்டுமாறு பேஸ் இணையத்தில் கோரப்பட்டிருந்தது.

சாதாரண இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என பேஸ் ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், இந்த நியாயப்படுத்தலை பாகிஸ்தான் சட்டத்தரணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இழிவான இந்த இணையதளத்தை முடக்குமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், பேஸ் புக் இணையத்தை தடை செய்யுமாறு உத்தரவிட்டது.

இஸ்ரேலில் ஐபேட் பயன்படுத்தத் தடை

இஸ்ரேலில் ஐபேட் கருவிகளைப்பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எபல் ஐபேட்களுடன் இஸ்ரேலுக்கு செல்லும் பயணிகள் அந்நாட்டு சுங்கப் பிரிவினரால் அவை பறிமுதல் செய்யப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கின்றனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பல ஐபேட் கருவிகள் விமான நிலையத்தில் காணப்படுகின்றது, பயணிகள் நாடு திரும்பும் போது அவை மீள ஒப்படைக்கப்படும். பேட் கருவியின் வை-பை தொழில்நுட்பம் அமெரிக்கத் தொழில்நுட்பத் தரத்திலானது எனவும், இஸ்ரேலில் ஐரோப்பிய தரத்திலான தொழில்நுட்ப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஐபேட் கருவிகள் உள்நாட்டு தந்தியில்லா சமிக்ஞை தொடர்பாடலுக்கு இடையூறாக அமையக் கூடும் என்பதனால் இவ்வாறு தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் கார்கள் இடதுபக்கமிருந்து செலுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டவை, இஸ்ரேலில் வலதுபக்கமிருந்து செலுத்துவதே வழமையாகும் எனவே இஸ்ரேலியர்கள் எவரும் பிரித்தானியாவிலிருந்து கார்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அரசாங்கத்தின் தீர்மானம் எந்தவிதமான தொழில்நுட்ப பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எதற்காக ஐபோட் கருவிகள் தடை செய்யப்பட்டன என்பது புரியவில்லை என இஸ்ரேலின் கணனி வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஸ்கைப் பயன்படுத்த தடை

ஸ்கைப் தொடர்பாடல் இணைய சேவையை பயன்படுத்துவதற்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் ஸ்கைப் இணைய தொடர்பாடல் சேவையை பயன்படுத்துவது சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் ஊடான சகல தொலைபேசி சேவைகளையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு வலையமைப்புச் சேவைகளின் ஊடாக மட்டுமே இணைய தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகின்றது. சீனா யுனிகொம் சீன டெலிகொம் ஆகிய சேவைகளின் ஊடாக மட்டுமே சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.

ஸ்கைப் இணைய சேவையை ரத்து செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் சொந்தமாக இவ்வாறான சேவைகைள அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணைதளங்கள் ஏற்கனவே சீனாவில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்களின் காரணமாக கூகிள் நிறுவனம் சீனாவில் இயங்கி வந்த சேவைத் தளத்தை கடந்த வருடம் மூடியிருந்தது.

அமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க கல்லூரிகளில் நெப்ஸ்டர் என்ற இசை கோவை பரிமாற்றுத் கணனி மென்பொருள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெப்ஸ்டர் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணையத்தின் ஊடாக எம்.பி.3 இசைக் கோவைகளைப் பரிமாற்றிக்கொள்ள முடியும். இந்த முறைமையின் மூலம் இசைக் கலைஞர்களின் புலமைச் சொத்து உரிமை மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியாயமான பாவனை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மென்பொருள் சேவையை வழங்கி வருவதாக நெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இணையப் பயன்பாடு கணனி வலையமைப்பு பொறியிலாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

லேசர் பொயின்டர் பாவனைக்கு அவுஸ்திரேலியாவில் தடை

அவுஸ்திரேலியாவில் லேசர் பொயின்டர்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லேசர் பொயின்டர்களை எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான நியாயமான காரணங்களை விளக்க வேண்டும்.

குறிப்பாக ஆசிரியர்கள், இளம் வானியல் ஆய்வாளர்கள், அளவையாளர்கள் ஆகியோர் லேசர் பொயின்டர்களை பயன்படுத்துகின்றனர். சக்தி வாய்ந்த லேசர் பொயின்டர்களை பயன்படுத்தி விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

அதி சக்தி வாய்ந்த சேலபர் பொயின்டர் பாவனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் மொரிஸ் இமாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபத்தை ஏற்படுத்தாத லேசர்களை எடுத்துச் சென்றாலும் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அல்லது 5000 டொலர் அபாராதம் விதிக்கப்படும்.

May 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது