ஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க

posted May 25, 2011, 6:39 AM by Onthachimadam WebTeam   [ updated May 25, 2011, 6:46 AM ]
உங்கள் கணணியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.

இணையதள முகவரிக்கு சென்ற பின் தோன்றும் விண்டோவில் நாட்டினையும், புகைப்படத்தினையும் தெரிவு செய்ய வேண்டும். பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் விண்டோவில் உங்கள் கணணியில் இருந்து புகைப்படத்தை UPLOAD செய்து NEXT என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் தெரிவு செய்த படத்தின் அருகில் உங்கள் மவுஸ் புள்ளியை கொண்டு செல்லும் போது + குறியீடு தோன்றும். இப்போது உங்கள் மவுஸ் முனையை நகர்த்தி படத்தின் தேவையான பகுதியை தெரிவு செய்யவும். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்கள் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு விடும். கட்டணம் செலுத்தி பிரிண்ட் செய்யும் வசதி கொண்ட விண்டோஸ் தோன்றும். அதிலே NO THANKS என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளுங்கள். DOWNLOAD THE PASSPORT PHOTO SHEET IMAGE என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணணியில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யலாம்.

Comments